திண்டிவனத்தில் உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பாப்கார்ன் இயந்திரம் இணைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பாக்சில் கைவைத்த மைத்திஸ் என்ற ஐந்து வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார் .இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.