2024 பாரிஸ் ஒலிம்பிக் பாதுகாப்பு பணியில் ஈடுபட இந்தியாவில் இருந்து 10 நாய்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. CRPF, Indo-Tibetian Border Police உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய காவலர் பிரிவைச் சேர்ந்த நாய்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த 10 நாய்களை கையாள்வதற்காக 17 வீரர்களும் உடன் செல்கின்றனர். கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற G-20 மாநாட்டில் இந்த நாய்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு அசத்தின என்பது குறிப்பிடத்தக்கது.