பள்ளிக் குழந்தைகள் மனதினில் பாலின சமத்துவத்தை விதைக்கும் நோக்கத்தில் கேரள அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி வீடுகளில் அப்பாக்கள் சமையல் பணிகளை கவனிப்பது போன்ற வரைபடங்களைப் பள்ளி பாடநூல்களில் இடம்பெறச் செய்துள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்பதைக் குழந்தைகள் மத்தியில் உணர்த்துவதே இதன் நோக்கம் என கேரள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். நடிகர் ப்ரிதிவிராஜ்-ன் ‘ஜன கண மன’ படத்தில், பாட நூல்களில் உள்ள வரைப்படங்கள் குழந்தைகள் இடையே ஏற்படுத்தும் தாக்கம் குறித்த வசனம் இடம்பெற்று பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.