குமரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா முருகன், பாலியல் தொழில் நடத்த அனுமதி கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் விநோதமான மனுவை தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் ஒருவர் பாலியல் தொழில் செய்ய நீதிமன்றத்தை அணுகியது வேதனையளிக்கிறது. அவரின் கல்வி தகுதி பற்றி ஆராய வேண்டும். இதுபோன்ற மனுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்து ₹10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.