உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான 85 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை அவரது மருமகன் காண சென்றபோது அண்டை வீட்டில் வசிக்கும் ராகேஷ் என்ற 35 வயது நபர் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து போலீசார் குற்றவாளியை கைது செய்த நிலையில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் ராகேஷ் குடிக்கு அடிமையானவர் என்பதும் தெரிய வந்தது.