பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர நிதி உதவிகளை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்கள் விபத்தால் உயிரிழந்தால் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஈமச்சடங்கு தொகை 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை 50,000 ரூபாயாகவும் திருமண உதவித்தொகை 60 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.