பிரிட்டனின் புதிய பிரதமர் ஸ்டார்மர், அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தார். அம்மாநாட்டை முடித்துக்கொண்ட அவர், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய பைடன், பிரிட்டனை விட இந்த உலகில் அமெரிக்காவுக்கு சிறந்த நட்பு நாடு ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.