பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்படுவதாக பாஜக பிரமுகர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க 20ஆம் தேதி பிரதமர் சென்னை வருகிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் தமிழக வருகைக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.