இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி செல்பி எடுத்துக் கொண்டார். அந்த வீடியோவை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ஹாய் பிரண்ட்ஸ் ஃபிரம் மெலோடி என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட மெலோனி இருவர் பெயரையும் குறிப்பிடும் வகையில் மெலோடி என்ற வார்த்தையை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த செல்பி வீடியோ வைரலாகி வருகிறது.