பிரபல நடிகர் சித்திக்கின் மகன் ரஷீன் சித்திக் (37) உடல்நலக்குறைவால் காலமானார். அஜித்தின் ஜனா, ரங்கூன், வைகை எக்ஸ்பிரஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வெந்து தணிந்தது காடு உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சித்திக்கின் மகனின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஷீன் சித்திக் உடல் படமுகல் ஜும்ஆ மஸ்ஜிதில் அடக்கம் செய்யப்பட்டது.