பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 2 தினங்களாக அவர், உடல் நலம் குன்றி காணப்பட்ட நிலையில், இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் காரணமாக, அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.