மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் குறித்து எக்ஸ் பக்கத்தில் போலியான செய்தியை பதிவிட்டதாக பிரபல யூடியூபர் துருவ் ரதி மீது மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓம் பிர்லாவின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்ளாமலேயே தேர்ச்சி பெற்றதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த போலி கணக்கு தன்னுடையதல்ல என ரதி மறுத்துள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.