திருச்சியில் தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவை துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் பிடித்துள்ளனர். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த அவர் சிறுகனூர் வனப்பகுதியில் தலைமுறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர் தப்பும் முயன்ற நிலையில் துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.