விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் திருமணம் லண்டனில் உள்ள லேடி வாக் எஸ்டேட்டில் நேற்று நடைபெற்றது. சித்தார்த்தும், அவரது நீண்ட நாள் காதலி ஜாஸ்மினும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள 30 ஏக்கர் லேடி வாக் எஸ்டேட்டை விஜய் மல்லையா கடந்த 2015ல் வாங்கியது குறிப்பிடத்தக்கது.