சென்னை தாம்பரத்தில் வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் 16 வயது அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பியுடன் வாக்குவாதம் முற்றியதால், அண்ணன் தாரிஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சிறுவனுக்கு அசைவ உணவு பிடிக்காது என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.