தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளதாக மாநிலங்களவையில் சமூக நீதி இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2020ல் 23, 2021ல் 39, 2022ல் 67 ஆக அதிகரித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் 1,274 வழக்குகள் பதிவான நிலையில், 2021ல் அதன் எண்ணிக்கை 1,377 ஆக அதிகரித்துள்ளது.