ஹோட்டலில் வாங்கும் உணவில் கரப்பான் பூச்சி, பூரான், பிளேடு இருந்ததாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பீஃப் பிரையில் பல்லி இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மாதிரிகளை சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.