எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களுக்கான அட்டவணை ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படுவது வழக்கம். அதில் புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் ரயில்கள் இயக்கப்படும் நேரம், புதிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும். இந்த நிலையில் புதிய அட்டவணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. அதுவரை பழைய அட்டவணையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.