முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும் பதிவு கட்டணத்தை குறைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முத்திரை மற்றும் திருத்தம் செய்வதற்கான மதிப்பீட்டு குழு விதியின் படி சீரமைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.