பட்ஜெட் நாட்டுக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், வேலைவாய்ப்பு, கல்வி, MSME, இளைஞர்கள், நடுத்தர மக்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.