புதுச்சேரியில் விஷவாயு தாக்கி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உயிரிழப்புக்கு 70 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மற்ற இரண்டு பெண்களுக்கு தலா ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்ததில் தவறு நடந்துள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு தொடர்பாக அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் கழிப்பறைக்கு சென்ற போது விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து விஷவாயு கசிந்து செந்தாமரை (வயது 72), அவரது மகள் காமாட்சி (45), செல்வராணி (15) ஆகியோர் பலியாகி உள்ளனர்.