பாராளுமன்ற தோல்விக்கு பிறகு என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் விரிசல் உருவாகி உள்ளது. பாஜக அமைச்சர்களுக்கு எதிராகவும், முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவும் பாஜக எம்.எல்.ஏக்களே போர் கொடி தூக்கியுள்ளனர். அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தான் 2024 தேர்தல் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்பதற்காக பாஜக எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான் குமார், ரிச்சர்டு, பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாசா அசோக், அங்காளன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.