2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பார்படாஸ் தீவுக்கு ‘பெரில்’ புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதனால், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியின் வீரர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக, இந்திய அணியை தனி விமானத்தில் டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.