விளைச்சல் அதிகரித்து பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் செல்வது வழக்கம். அந்தவகையில், திண்டுக்கல் பூ சந்தையில் கடந்த வாரம் கிலோ ₹1000க்கு மேல் விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ₹500க்கும், ₹700க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ₹60க்கும், ₹150க்கு விற்கப்பட்ட சம்பங்கி ₹15க்கும் விற்பனையாகிறது