இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள லுவு ஏஜென்சி பகுதியில் செவ்வாய்கிழமை 30 அடி மலைப்பாம்பு ஒன்று பெண் ஒருவரை விழுங்க முயன்றது. சிறியாதி (36) என்ற பெண் தனது நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு மருந்து எடுத்து வருவதற்காக வீட்டை விட்டு சென்ற நிலையில்பின் காணாமல் போனார். அந்தப் பெண்ணை தேடி அவரது கணவர் சென்ற நிலையில் வீட்டுக்கு 500 மீட்டர் தூரத்தில் மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. அந்த பாம்பு அப்பெண்ணை விழுங்கிக் கொண்டிருந்த போது, கால்கள் மட்டும் வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக பாம்பைக் கொன்று பெண்ணை வெளியே எடுத்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.