யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமின் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாமீன் வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க மாட்டேன் என பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வாதத்தை முன் வைத்தது. சிறையில் நீண்ட நாள் அடைத்து வைக்கும் நோக்கில் ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு கைது ஆனார். பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பியதாக பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார். ஜாமீன் தொடர்பாக தமிழக காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.