தமிழகத்தில் உள்ள பேய்களை ஓட்டும் வேதாளமாக தான் வந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தை இன்று
பீடைகள் போல பல அரசியல் பேய்கள் பிடித்துள்ளதாக விமர்சித்த அவர், ஒவ்வொரு பேயாக விரட்டுவதே தனது முதல் பணி என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையை வேதாளம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.