சமீபகாலமாக சிலர் ஆபத்தான பைக் ஸ்டண்ட் செய்து வருகிறார்கள். அதிலும் தங்களது காதலிகளுடன் இணைந்து காதலர்கள் செய்யும் அட்டூழியம் அதிகமாகிவிட்டது. அதன்படி திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காதல் ஜோடி சமீபத்தில் பைக் ஸ்டண்ட் செய்து, இன்ஸ்டா ரீல் எடுத்தது. இளம்பெண் பைக்கை ஓட்டியபோது பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது வாலிபர் அமர்ந்து வந்தார். இந்த வீடியோ வைரலாக நிலையில் காதல் ஜோடிக்கு போலீசார் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.