முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில் அதிமுக தலைமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பொதுவெளியில் பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று அதிமுகவை யாரும் விமர்சிக்கக் கூடாது என பாஜகவும் அறிவித்துள்ளது.