தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பொய் வழக்குகள் மூலம் எங்களை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.