பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, 1.99 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 11 வரை கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், 7.5% உள் ஒதுக்கீட்டு சிறப்புப் பிரிவு, சிறப்பு இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் நாளை பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வு குறித்து இந்த இணையதளத்தில் அறியலாம்.