தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.18,179 கோடி கடன் உள்ளதாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், வாகன கொள்முதல் கடன் ரூ.590 கோடியும், குறுகிய கால கடன் ரூ.5,982 கோடியும், நடைமுறை மூலதனத்திற்கான பருவக் கடன் ரூ.11,607 கோடி என மொத்தமாக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு ரூ.18,179 கோடி செலுத்த வேண்டியுள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.