திருநெல்வேலி போக்குவரத்து மண்டலங்களில் உள்ள பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தேவை என்று நாளேடுகளில் விளம்பரம் வெளியாகி இருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் இதனை மீறும் வகையில் அரசு இவ்வாறு விளம்பரம் வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.