டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. அதில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு போனஸ் ரூ.2.5 கோடி உள்பட ரூ.5 கோடி வழங்க பிசிசிஐ முன் வந்தது. ஆனால், ₹2.50 கோடியை மட்டும் பெற்றுக் கொண்டு மீதத் தொகையை அவர் சக ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம், சக பயிற்சியாளர்களுக்கு கூடுதல் போனஸ் கிடைக்கவுள்ளது.