மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாயை, கூட்டுறவு வங்கியில் சேமித்தால், கூடுதல் வட்டி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4% வரை வட்டி கிடைக்கும். ஆனால், மகளிர் உரிமைத் தொகை ₹1000-ஐ கூட்டுறவு வங்கியில் சேமிக்கும்போது 7.5% வட்டி பெறலாம். இதற்காக அரசு மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தை நீலகிரியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது, விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்