மகளிர் உரிமைத் தொகை ரூ1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூலை 15) இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், புதிதாக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட 1.48 லட்சம் பேருக்கும் இம்மாதம் முதல் ரூ1000 வழங்கப்பட உள்ளது.