மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 4 வீராங்கனைகள் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி முதலில் களமிறங்கி 325 ரன்கள் குவித்த நிலையில், ஸ்மிருதிமந்தனா 136 மற்றும் ஹர்மன் பிரீத் கவுர் 103 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் மரிஸான் கேப் 114 ரன்கள் மற்றும் லாரா வோல்வார்ட் 135 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.