சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 47 வயதான கூலி தொழிலாளி தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆத்தூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.