NDA வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான ஓம் பிர்லா அபார வெற்றி பெற்றிருக்கிறார். கருத்து வேறுபாடுகள் காரணமாக INDIA கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று மக்களவையில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஓம் பிர்லா வெற்றி பெற்றார்.