மணிப்பூர் மக்களின் அவலத்திற்கு முடிவு கட்ட காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 3 முறை மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளதாக கூறிய அவர், துரதிர்ஷ்டவசமாக மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார். மாநிலம் இரண்டாக பிளவுப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என்றும், மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்த கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.