மத்திய பட்ஜெட் காற்று ஊதப்பட்ட பலூன் என மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். ஆட்சியை காப்பாற்றும் ஆந்திரா, பிஹார் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ரயில்வே என்ற வார்த்தை இன்றி பட்ஜெட் தாக்கலாகி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.