இன்று(23.07.2024) தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரையாற்றினார். அதன்பின் செல்வப் பெருந்தகை மத்திய பட்ஜெட் பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், எல்லாம் மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டிய நிதியை ஆந்திராவிற்கும் பிகாருக்கும் அதிக அளவில் கொடுத்திருப்பது ஏன்? தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக மத்திய அரசு சந்தர்ப்பவாதத்துடன் பாசிச மனப்பான்மையுடன் நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.