தங்களுடைய வாழ்க்கை துணையை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுப்பதும் ஒரு வகையில் இந்து திருமண சட்டத்தின் கீழ் கொடுமையாகவும், விவாகரத்துக்கு உகந்த காரணமாகவும் கருதப்படும் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.