அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளர் ஷிலாதித்யா சேத்தியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோய் காரணமாக கவுகாத்தியிலுள்ள மருத்துவமனையில் அவருடைய மனைவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மோசம் அடைந்து உயிரிழந்தார். இந்த நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.