தெலுங்கில் ‘குண்டுர் காரம்’ படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து ‘குர்ச்சி மடதாபெட்டி’ பாடலில் நடிகை ஸ்ரீலீலா (23) போட்ட குத்தாட்டம் உலக அளவில் வைரலானது. இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழில் ஒரு நல்ல வாய்ப்பிற்காக காத்திருப்பதாகவும், தற்போது மருத்துவம் படித்து வருவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலீலாவின் தாயார் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.