டெல்லியில் நேற்று பெய்த மழையால் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராம் கோபால் யாதவ் இல்லத்தில் இருந்து வெளியே வந்தபோது. முழங்கால் அளவு நீர் இருப்பதைக் கண்டார். நீரில் கால் வைக்க தயங்கியவரை, அவரது ஊழியர்கள் தூக்கிச் சென்று காரில் அமரச் செய்தனர். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து, ஏழைகளின் கஷ்டம் இவர்களுக்கு தெரியாது என பலர் விமர்சித்து வருகின்றனர்.