மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (டிசி) கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று, பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளிக்கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கி என குறிப்பிட்டு, மாணவர்களை மனரீதியில் பாதிப்படைய செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டனர். இதை மீறினால், உரிமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டனர்.