வங்கி கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை இன்று அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. மறுபக்கம் ஆதார் தொடர்பான மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வாக மக்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் மாஸ்க்டு ஆதார் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டைக்கு பதிலாக இந்த ஆதார் பயன்படுத்த முடியும். இதில் 12 இலக்க ஆதார் எண்ணில் 8 எண்கள் மறைக்கப்பட்டு கடைசி 4 எண்கள் மட்டும் இடம்பெறும்.