தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமகவினர் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைப் போலவே நாம் தமிழர் கட்சி சார்பாக ஜூலை 21ஆம் தேதியும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் சார்பில் ஜூலை 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.