தமிழில் வனமகன் படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர், நீண்ட இடைவெளிக்கு பின் ‘பத்து தல’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த நிலையில், மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.